உலக பாரம்பரிய தினம் | கலை சின்ன வளாகங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி

உலக பாரம்பரிய தினம் | கலை சின்ன வளாகங்களில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி
Updated on
1 min read

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி பல்லவ மன்னர்களின் கலைச்சின்ன வளாகங்களுக்குள், சுற்றுலா பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ மன்னர்களின் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம்மற்றும் கிருஷ்ண மண்டபம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவற்றை, பாரம்பரிய கலைச் சின்னங்களாக தொல்லியல் துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

மேலும், இந்த கலைச் சின்ன வளாகத்துக்குள் சென்றுசிற்பங்களை அருகில் கண்டு ரசிக்கதொல்லியல் துறை சார்பில் உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், உலக பாரம்பரிய தினமான நேற்று கலைச் சின்ன வளாகத்துக்குள் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தொல்லியல் துறை தெரிவித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி கலைச் சின்னங்களை அருகில் சென்று கண்டு ரசித்துமகிழ்ச்சியடைந்தனர். மேலும், சுற்றுலாவழிகாட்டிகள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in