

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் மற்றும் இலங்கைக்கு சிறப்பு விமான சுற்றுலாவை ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் கல்வி சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா உள்பட பல்வேறு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் இருந்து அந்தமான் மற்றும் இலங்கைக்கு சிறப்பு விமான சுற்றுலாவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. அதன் விவரம்: சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஏப்.26, மே 20 ஆகிய தேதிகளில் சிறப்பு விமானம் புறப்படவுள்ளது.
அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 47,500 கட்டணமாகும்.
இதுபோல, சென்னையில் இருந்து இலங்கைக்கு ஏப்.25, மே 23 ஆகிய தேதிகளில் சிறப்பு விமானம் புறப்படுகிறது. இலங்கையில் கொழும்பு, நுவரெலியா, கண்டி, கதிர்காம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
5 நாட்கள் சுற்றுலா: இலங்கைக்கு 5 நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.64,000. இதில், விமான கட்டணம், விசா, தங்கும் வசதி, பயணக்காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இது குறித்து மேலும் தகவல்களை பெற 8287931968, 8287931977, 8287932070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.