

கொடைக்கானல்: கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட பாப்பி மலர்ச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
கொடைக்கானலில் வரும் மேமாதம் நடைபெற உள்ள 61-வதுமலர்க் கண்காட்சிக்காக பிரையன்ட்பூங்காவில் பிங்க் அஸ்டர், டெல்பினியம், லில்லியம், சால்வியா போன்ற மலர் செடிகள் 20,000-க்கும் மேல் நடவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பூங்காவை தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பூங்கா முழுவதும் நடவு செய்துள்ள பாப்பிமலர்ச் செடிகளில் மஞ்சள் வண்ணப்பூக்கள் பூத்துக் குலுங்குவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.
இந்தப் பூக்களை சுற்றுலாப் பயணிகள் படம் எடுத்து மகிழ்கின்றனர். வரும் நாட்களில் மலர்க் கண்காட்சிக்காக நடவு செய்துள்ள வெவ்வேறு மலர்ச் செடிகளிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.