சென்னை - அலங்காநல்லூர் 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுலா - பதிவு செய்வது எப்படி?

சென்னை - அலங்காநல்லூர் 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுலா - பதிவு செய்வது எப்படி?
Updated on
2 min read

மதுரை: பொங்கல் பண்டிகையை முன் னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க விரும்புவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையிலிருந்து செல்லும் வகையில் 3 நாள் சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கல் பண்டிகை முதல் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் அறிவிக் கப்பட்டுள்ளது. ஜன.17-ம் தேதி மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் நடைபெறும் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை வாழ்நாளில் ஒரு முறையாவது நேரடியாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கம் பெரும் பாலானோருக்கு இருக்கும். ஆனால், அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்ப்பதற்காக முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

டிக்கெட் எடுத்து பாது காப்பாகச் சென்று ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்ப்பது வெளியூர் மக்களுக்கு தற்போது வரை கனவாக உள்ளது. 2007-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஆர்வமாகப் பங்கேற்ற சென்னை உட்பட வெளியூர் வாசிகளுக்கு ஜல்லிக் கட்டுப் போட்டியை பார்க்க அதீத ஆர்வம் இருந்து வருகிறது. அந்த ஆர்வத்தை நிறைவேற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஒரு வாய்ப்பை இந்த ஆண்டு வழங் கியிருக்கிறது.

பொங்கல் பண்டிகை நாளில் 3 நாள் சுற்றுலாப் பயணமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க சென்னை - அலங்காநல்லூர் 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியுடன் மதுரையின் முக்கியக் கோயில் களுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப் படுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது: தமிழர்களின் வீர விளை யாட்டு நடக்கும் இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க சென்னை யிலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஜன. 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 3 நாள் ஜல்லிக்கட்டு சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளை 16-ம் தேதி சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்தில் அழைத்து வந்து மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் தங்கவைக்கப்படுவர்.

17-ம் தேதி காலை 9 மணிக்கு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுலாப் பயணிகள், அழைத்துச் செல்லப்படுவர். போட்டியைப் பார்த்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பும் சுற்றுலாப் பயணிகள், அன்று மாலை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு அழைத்துச் செல்லப்படுவர்.

18-ம் தேதி காலை அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் மற்றும் சோலைமலை முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தப் பயணத்துக்காக முன்பதிவு செய்தோருக்கு அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வளாகத்தில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கேலரியில் முன்கூட்டியே டிக்கெட் பெற்று பாதுகாப்பாக அழைத்துச் சென்று 3 மணி நேரத்துக்கும் மேலாகப் போட்டியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்தப் பயணம் வெற்றிகரமாக நடைபெறும் பட்சத்தில், அடுத்த ஆண்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அலங்கா நல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

சென்னை-அலங்கா நல்லூர் பயணத்தில் சேர விரும்புவோர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 044-25333333, 25333 444, 25333857, 25333850/854 ஆகிய எண்களிலும், ttdcsalescounter@gmail.com, tamilnadutourism.tn.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் வலைதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in