சென்னை – அந்தமானுக்கு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு

சென்னை – அந்தமானுக்கு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமான சுற்றுலாவை ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.

இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் கல்வி சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா உள்பட பல்வேறு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு விமான சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது. அதன் விவரம்: சென்னையில் இருந்து வரும் 23 ம் தேதி சிறப்பு விமானம் புறப்படவுள்ளது.

அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 51,500 கட்டணமாகும். விமான கட்டணம், தங்கும் வசதி, கப்பல் பயண கட்டணம், பயண காப்பீடு உள்ளிட்டவை இதில் அடங்கும். இது குறித்து மேலும் தகவல்களை பெற 8287931974, 8287931977, 8287932070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in