

சென்னை: சென்னையில் இருந்து புவனேஸ்வர் மற்றும் ஷில்லாங்-குக்கு விமானம் மூலமாக, சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது. இந்திய ரயில்வேயில் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில், பல்வேறு சிறப்பு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னை யில் இருந்து புவனேஸ்வர், அசாம், மேகாலயாவுக்கு சிறப்பு விமானம் மூலமாக அழைத்து செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை இருந்து புவனேஸ்வருக்கு பிப்.6-ம் தேதி ஒரு விமானம் புறப்படுகிறது. புவனேஸ்வர், கோனார்க், பூரி ஜகன்னாதர் கோயில் மற்றும் சில்கா ஏரி ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். 5 நாட்கள் பயணத்துக்கான கட்டணம் ரூ. 38,500. சென்னையில் இருந்து அசாம், மேகாலயாவுக்கு பிப்.10-ம் தேதி சிறப்பு விமானம் புறப்படுகிறது. ஷில்லாங், சிரபுஞ்சி, காமாக்யா, குவஹாத்தி மற்றும் காஜிரங்கா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். 7 நாட்கள் பயணத்துக்கான கட்டணம் ரூ.47,500.
இந்த இரண்டு பயணங்களுக்கு முன்னதாக, சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஜன.23-ம் தேதி ஒரு சிறப்பு விமானம் புறப்படுகிறது. போர்ட் பிளேயர்- நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் ஆகிய இடங்களுக்கு பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். 6 நாட்கள் பயணத்துக்கான கட்டணம் ரூ.52,800. இந்த சுற்றுலாவில் விமானகட்டணம், உள்ளூர் போக்கு வரத்து, தங்கும் வசதி, உணவு, சுற்றுலா மேலாளர், பயணக்காப்பீடு ஆகியவை அடங்கியுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை அறியவும், முன்பதிவு செய்யவும் 9003140682, 8287931974 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.