

குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கடந்த ஒரு வாரமாக, பிறந்த குட்டியுடன் காட்டு யானைக் கூட்டம் உலா வருகிறது. அவ்வப்போது, உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கே.என்.ஆர் பகுதியில் நேற்று மதியம் காட்டு யானைக்கூட்டம் சாலையை கடந்தது. அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். இதனால், சாலையை கடக்க யானைகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதைக் கண்ட வனத்துறையினர், காட்டு யானையை வீடியோ எடுத்தவருக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்ததுடன், எச்சரித்து அனுப்பினர்.