48-வது சுற்றுலா பொருட்காட்சி: ஜன.9-ல் தொடங்க திட்டம்

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன . 
| படம்: எஸ்.சத்தியசீலன் |
தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் 48-வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன . | படம்: எஸ்.சத்தியசீலன் |
Updated on
1 min read

சென்னை: தமிழக சுற்றுலாத் துறை சார்பில் 48-வது சுற்றுலா பொருட்காட்சி ஜன.9-ல் தீவுத்திடலில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சுற்றுலாத் துறையின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2 அல்லது 3-வது வாரத்தில் சுற்றுலாமற்றும் தொழிற் பொருட்காட்சி தொடங்கப்படும். சென்னை தீவுத்திடலில் 70 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியை, அடுத்த மாதம் ஜன.9-ம் தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த கண்காட்சியில் அரசுத் துறைகளைச் சேர்ந்த அரங்குகள், பொதுத் துறைஅரங்குகள், மத்திய அரசின் அரங்குகள், பிற மாநில அரசுகளின் அரங்குகள் என 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரங்குகளில் தமிழக அரசின்பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும், சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள்,மேஜிக் அரங்குகள், பறவைகள் கண்காட்சி, சிறுவர்கள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள், பொழுதுபோக்கு மேடை நிகழ்ச்சிகள் எற்பாடு செய்யப்பட உள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in