

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பகுதியில் பகலிலேயே சாலைகள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. சூரிய வெளிச்சமில்லாமல் பனி சூழ்ந்து கொடைக்கானல் இயற்கை எழிலுடன் ரம்மியமாக காட்சி அளித்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உருவானது. குளிர் வாட்டியதால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பகலில் 15 முதல் 17 டிகிரி செல்சியஸ், இரவில் 12 முதல் 14 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவுகிறது. இரவில் கடும் குளிர், பகலில் பனிப்பொழிவால் கொடைக்கானல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.