கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்: பயணிகள் அச்சம்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியை யொட்டிய பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானை.
கொடைக்கானல் பேரிஜம் ஏரியை யொட்டிய பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானை.
Updated on
1 min read

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. வனத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று சுற்றுலா பயணிகள் ஏரிப்பகுதிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், பேரிஜம் ஏரியில் திடீரென குட்டியுடன் காட்டு யானைகள் முகாமிட்டன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். யானைகள், பேரிஜம் ஏரி பகுதியிலுளள பெயர் பலகைககளை சேதப்படுத்தியுள்ளன. மேலும், இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் ந‌ட‌மாட்ட‌த்தினை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

இதுபோன்ற சூழலில் பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கொடைக்கான‌ல் வ‌ரும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் அட‌ர்ந்த‌ வனப்பகுதிக்கு இடம் பெயர‌ வாய்ப்பிருப்ப‌தாக‌ வனத்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in