

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்களின் மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் சுற்றுலாதுறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழக சுற்றுலா துறையின் படகு குழாம்களில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13.11 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக, மலைப்பகுதி சுற்றுலா தலங்களான ஊட்டியில் 6.81 லட்சம் பேர், கொடைக்கானலில் 2.30 லட்சம் பேர், ஏற்காட்டில் 1.58 லட்சம் பேர் படகு பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.