Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM
தமிழகம் முழுவதும் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் கூட்டுறவு துறைமூலம் நடத்தப்படும் 303 மருந்தகங்களில் மருந்துகளுக்கு 20 சதவீதம்வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த மருந்தகங்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 60 கடைகள் என, அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 600 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22 ஆண்டுகூட்டுறவு துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம்நேற்று திறந்து வைத்தார்.
சென்னையில் மயிலாப்பூர், ராயப்பேட்டை, கொளத்தூர், கொடுங்கையூர் பகுதிகளில் 4 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், காஞ்சிபுரத்தில் முத்தியால்பேட்டை, அமராவதிப்பட்டினம், திருவள்ளூரில் நாராம்பேடு,ஆர்.கே.பேட்டையில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டுறவு மருந்தகங்கள் இயங்கி வரும் பகுதிகளில் தனியார் மருந்து கடைகளும் போட்டியின் காரணமாக விலையை குறைத்து விற்பனை செய்து வருகின்றன. இதனால், கூட்டுறவு துறைமூலம் நடத்தப்படும் மருந்தகங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
தனியார் மருந்தகங்களுக்கு நிகராக புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருந்தகங்கள் பொலிவுடன் விளங்க, அவற்றில் கணினி, குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுநர், உதவியாளர் பணியில் இருப்பார்கள்.
ரூ.1.97 கோடியில் கட்டிடம்
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு,ராஜகண்ணப்பன், மூர்த்தி, தலைமைச் செயலர் இறையன்பு, உணவுதுறை செயலர் முகமது நசிமுத்தீன்,உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராஜன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT