Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM

கல்வி நிறுவன பணியிடம் ஓராண்டில் நிரப்பப்படும்மத்திய அமைச்சர் தகவல் :

சென்னை

மாநிலங்களவையில் 15-ம் தேதி பேசிய மதிமுக பொதுச் செயலர் வைகோ, “நாடு முழுவதும் ஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றிய விவரங்கள் அரசிடம் உள்ளதா? உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடஒதுக்கீட்டு இடங்கள் எப்போது நிரப்பப்படும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘மத்தியஅரசின் பொறுப்பில் உள்ள பல்கலைக்கழகங்கள், இக்னோ, ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில், பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியல், காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை அளித்துள்ளோம்.

காலி பணியிடங்கள் அனைத்தும் 2022 செப்.4-ம் தேதிக்குள் நிரப்பப்படும். அதற்கான பணிகளை கடந்த செப்.5-ம் தேதி தொடங்கி, துரிதமாக செயல்படுத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x