Published : 17 Dec 2021 03:06 AM
Last Updated : 17 Dec 2021 03:06 AM
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையில், தொகுதியில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளை கண்டறிந்து செயல்படுத்தும் வகையில் ஒதுக்கப்படும் இந்தநிதியை விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த டிச.2-ம் தேதி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், 2021-22 ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் 50 சதவீதம் என்ற அடிப்படையில் ரூ.352.50 கோடியை விடுவித்துதமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT