தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை - அரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஓபிஎஸ், பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை -  அரசின் பழிவாங்கும் நடவடிக்கை :  ஓபிஎஸ், பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்
Updated on
1 min read

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக முன்பைக் காட்டிலும் பலமுடன் வீறுகொண்டு எழுகிறது என்பதை தாங்கிக் கொள்ளமுடியாத திமுக அரசு, அரசியல்வன்மம், காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி இல்லம், அவரது நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் சோதனைநடத்தி வருகிறது.

ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதிதான் தலைவர் என்பதைமுன்னிலைப்படுத்தி, அடுத்தகட்டதலைவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இந்தச் சூழலில் தற்போதைய அரசை முதல்வரின் மருமகன் சபரீசன்தான் வழிநடத்துகிறார் . இதையெல்லாம் மறைக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை முதல்வர் கையில் எடுத்துள்ளார்.

வரும் 17-ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அதிமுகஅறிவித்துள்ளதைப் பார்த்து அஞ்சிஇந்த சோதனையை நடத்துகின்றனர். இந்த சலசலப்புகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்தஇயக்கமும் நாங்களும் யாரையும் எந்த நேரத்திலும் கைவிடமாட்டோம். திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அதிமுக முன்னாள் அமைச்சர் கள் வீடுகளில் நடக்கும் சோதனை கள், காழ்ப்புணர்ச்சியால் நடத்தப் படுகின்றன. இருந்தாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான், அதன் உண்மைத்தன்மை தெரிய வரும்" என்றார்.

மக்கள் நீதி மய்யம்

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவது, நீதியை நிலைநாட்டவா அல்லது அவர்களை பீதியில்வைத்திருக்கவா என்பதை தொடர் நடவடிக்கை மூலம்தான் அறிய முடியும். ஊழல் மூலம் சொத்து குவித்தோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த அரசு தன்னை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in