Published : 14 Dec 2021 03:08 AM
Last Updated : 14 Dec 2021 03:08 AM

பொது பெட்டிகளுடன் செங்கோட்டை - கொல்லம் ரயில் நாளை முதல் இயக்கம் :

சென்னை

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு செங்கோட்டை - கொல்லம் இடையே முன்பதிவுஇல்லாத பொதுப் பெட்டிகளுடன் கூடியவிரைவு ரயில்கள் நாளை (15-ம் தேதி) முதல்இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்றுவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல், முன்பதிவு இல்லாத ரயில்களும் மீண்டும் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை - கொல்லம் இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரயில்கள் (06659/06660) நாளை (15-ம் தேதி) முதல் இயக்கப்படும்.

செங்கோட்டையில் இருந்து வரும் 15-ம் தேதி முதல் காலை 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் அதேநாளில் மாலை 3.35 மணிக்கு கொல்லம் செல்லும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து வரும் 16-ம் தேதி முதல் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அதேநாளில் மதியம் 2.20 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

குருவாயூர் ரயில் சேவையில் மாற்றம்

திருவனந்தபுரம் கோட்டத்தில் சில இடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் (16127) வரும் 15, 16, 17, 19-ம் தேதிகளில் எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x