ரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு :

ரங்கம்  கோயிலில்  வைகுண்ட  ஏகாதசி  பெருவிழா -  இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு :
Updated on
1 min read

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில், முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் எனப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச.3-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நடைபெற்று, டிச.4-ல் பகல்பத்து திருநாள் தொடங்கியது. பகல்பத்து விழாவின் நிறைவுநாளான நேற்று மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் ரத்தினாங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு எழுந்தருளினார். கரோனா காரணமாக சொர்க்கவாசல் திறப்பைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று காலை 7 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in