

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக மின்சார கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசை பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பை ஈடுகட்டுவதற்காக மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு தமிழகஅரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது ஏற்கெனவே பெரும் துயரத்தில் இருக்கும் மக்களுக்கு கூடுதல் துயரத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் மின் கட்டணத்தை 2022-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதிக்குள் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும், அதன்படி மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான நடைமுறைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் உண்மைத் தன்மையை தமிழக அரசுதான் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் கடுமையாக பாதிப்பு
மின் கட்டணத்தை உயர்த்துவதில் திமுக அரசுக்கும் உடன்பாடு இருக்காது என்றே கருதுகிறேன். கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.