பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது :

பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது :
Updated on
1 min read

பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் மதிவாணன் (52).

இவர் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். தவறான முறையில் நடக்க முயற்சிப்பதாக அவர் மீது பள்ளியைசேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி மற்றும் அவரது பெற்றோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பாலியல் புகார் அளித்தனர்.

இதற்கு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆசிரியர் மதிவாணனை போக்ஸோ சட்டத்தின்கீழ் நாமக்கல் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in