பெங்களூருவில் இருந்து தஞ்சாவூருக்கு - கடத்தி வந்த 1,750 கிலோ குட்கா பறிமுதல் :

பெங்களூருவில் இருந்து தஞ்சாவூருக்கு -  கடத்தி வந்த 1,750 கிலோ குட்கா பறிமுதல் :
Updated on
1 min read

தஞ்சாவூர் சரகத்தில் குட்கா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் சந்தேகப்படும்படியாக நின்ற கண்டெய்னர் லாரி மற்றும் மினி லாரி ஆகியவற்றை சோதனை செய்தனர்.

அப்போது, கண்டெய்னர் லாரியில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பு உள்ள 1,750 கிலோ எடையுள்ள குட்கா இருப்பதும், அவற்றை மினி லாரிக்கு மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரையை சேர்ந்த தருமராஜ் மகன் ராஜ்குமார்(28), தஞ்சாவூர் ஞானம் நகர் வேதையன் மகன் அசோக்ராஜ்(31), சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்த்(24) ஆகியோரை கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை டிஐஜி பிரவேஷ்குமார் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in