மீனவர்களை தாக்கிய இலங்கை படையினர் - கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல் :

மீனவர்களை தாக்கிய இலங்கை படையினர் -  கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல் :
Updated on
1 min read

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நேற்று ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

வங்கக் கடலில் கச்சத் தீவுஅருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த, தலைமன்னார் பகுதி மீனவர்கள் மீது இலங்கை ராணுவப் படையினர் கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்கியுள்ளனர்.

இதனால் தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள்மீது, இலங்கைப் படையினர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய தாக்குதல்கள் தொடர்வது கவலை அளிக்கிறது.

இதற்குக் காரணமான இலங்கைப் படையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பரப்பு குறுகியது. அங்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in