Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா டிச. 11-ல் தொடக்கம் :

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவெகு விமரிசையாக நடைபெறும்.இந்தாண்டு வரும் 11-ம் தேதிஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 12-ம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகனம், 13-ம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா நடைபெறுகிறது. அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தின் முன் பகுதியில் நடராஜர், சிவகாமியம்மனுக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். 20-ம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜை நடைபெறும். தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதி உலாவந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். திருவிழாவின் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சைபூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.

வரும் 21-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x