

மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்கள் அகற்றப்பட்டன.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் ஏற்கெனவே இடம் பெற்றிருந்தது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் நேற்று முன்தினம் வைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை திமுகவினர் இடம்பெறச் செய்ததாக அதிமுகவினர் புகார் எழுப்பினர். முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமாரும் மாவட்டஆட்சியருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் அதிகாரிகளின் தீவிர ஆலோசனைக்குப் பிறகு கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்கள் நேற்று அகற்றப்பட்டன.
அதிகாரி விளக்கம்
இந்நிலையில், விளம்பரப் பலகையில் இடம் பெற்றிருந்த இரு முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை அகற்றினோம் என்றார்.