

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 55 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அதே அளவு தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியை கடந்த 13-ம் தேதி எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று நண்பகலில் 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இது மேலும் குறைந்து நேற்று இரவு விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து அணை சுரங்க மின்நிலையங்கள் வழியாகவும், 16 கண் மதகு வழியாகவும் விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கால்வாய் பாசனத்துக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்று 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவும், நீர் இருப்பு 93.63 டிஎம்சி-யாகவும் உள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
இதனால், ஒகேனக்கல் ஐவர்பாணி அருவி மற்றும் மெயின்அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை நீடிக்கிறது.
ஒகேனக்கல்லில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தடை நீடிக்கிறது