

மேட்டூர் அணைக்கு நீர்வரத்துவிநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அதே அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த13-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில் அதே அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
வரத்துக்கு ஏற்ப வெளியேற்றம்
சுரங்க மின்நிலையத்தில் பழுது
இந்நிலையில், சுரங்க மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகில் பழுது ஏற்பட்டு, நேற்று முன்தினம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால், பழுதான அலகு வழியாக நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டு, பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து
இந்நிலையில், நேற்று காலையில் விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
மேலும், மழை நீர் வரத்து காரணமாக காவிரியாற்றில் கலங்கிய நிலையில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அருவிகள் உட்பட ஒகேனக்கல்லின் அனைத்து பகுதிகளிலும் காவிரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கிறது.