

பாளையங்கோட்டை மத்திய சிறைக் காவலர்கள் 5 பேரின் இடமாறுதல் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
பாளையங்கோட்டை சிறைக்காவலர்கள் நரசிங்கராஜா உள்ளிட்ட 5 பேர், தங்களின் நிர்வாக ரீதியான இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
அரசு தரப்பில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சாதிரீதியான பிரச்சினை உள்ளது. இரு தரப்பினரிடையே பிரச்சினைக்குரிய செய்திகளை மனுதாரர்கள் பரப்பியுள்ளனர். சிறைக்குள் பாதுகாப்பு மற்றும் அமைதியான சூழல் கருதி நிர்வாக ரீதியாக மனுதாரர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது.
உயர் நீதிமன்றம் உத்தரவு
இடமாறுதலும் நிர்வாக காரணத்துக்காகவே வழங்கப்பட்டுஉள்ளது. இதுதொடர்பான இடமாறுதல்களில் அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். மனுதாரர்களை இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.