Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

சின்னசேலம் அருகே - பழங்குடியினத்தைச் சேர்ந்த5 பேரை போலீஸ் கடத்தியதா? : ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சின்னசேலத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 பேரை, சீருடை அணியாத சிறப்புப் படைப் பிரிவு போலீஸார் கடத்திச் சென்று பொய் வழக்கு போட முயற்சிப்பதாக அவர்களின் உறவினர்கள் நேற்று கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தில்லை நகரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் தனது உறவினர்களுடன் வந்து, ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனனது கணவர், பிரகாஷ் (25), உறவினரான தர்மராஜ்(35), செல்வம் (55) ஆகியோர் எனது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நேற்று முன்தினம் இரவு வேனில் வந்த சீருடை அணியாத போலீஸார், தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து வேனில் இழுத்துச் சென்றனர்.

காரணம் கேட்டபோது கூறமறுத்து விட்டனர். அதன்பின்புநேற்று முன்தினம் சின்னசேலம்காவல் நிலையத்துக்குச் சென்றோம். போலீஸார் அழைத்துச் சென்றவர்கள் அங்கில்லை. இதனிடையே நேற்று மீண்டும்ஊருக்குள் வந்த போலீஸார்எங்களது உறவினர்களான பரமசிவம்(42) மற்றும் சக்திவேல்(29) ஆகிய இருவரையும் வேனில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பழங்குடியினரான எங்கள் குடும்பத்தினரை எந்தக் காரணமும் கூறாமல் கண்மூடித்தனமாக தாக்கி போலீஸார் அழைத்துச் சென்று எங்கு வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அவர்களது உயிருக்கும் உடைமைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x