செல்போனை திருடியதாக சிறுமி மீது தாக்குதல் :

செல்போனை திருடியதாக சிறுமி மீது தாக்குதல் :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், குளமங்கலத்தைச் சேர்ந்தவர் வி.ஞானமணி(49). இவரது செல்போனை 12 வயது சிறுமி ஒருவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது, பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததாகவும், அதற்காக செல்போனை கடையில் கொடுத்துவிட்டு சாப்பிடலாம் என்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் அந்தச் சிறுமி கூறியதுடன், அந்த செல்போனை ஞானமணியிடம் திருப்பி கொடுத்துவிட்டார்.

இதையடுத்து ஞானமணி, அவரது மனைவி மலர் உள்ளிட்டோர் சிறுமியை மரத்தில் கட்டிவைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர்,அதே ஊரைச் சேர்ந்த சிலர் சிறுமியை விடுவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஞானமணி, மலர் ஆகியோரை கீரமங்கலம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in