Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

2022-ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை :

வரும் 2022-ம் ஆண்டில் தமிழக அரசின் பொது விடுமுறை தினங்களாக 23 நாட்களைக் குறிப்பிட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு விடுமுறை நாட்கள், அனைத்து சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். இது, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களுக்கும் பொருந்தும். ஏப்ரல் 1-ம் தேதி விடுமுறை, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆண்டைப் பொறுத்தவரை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அரசு விடுமுறை தினங்கள் வருகின்றன.

குறிப்பாக, ஆங்கிலப் புத்தாண்டு (ஜன. 1) , திருவள்ளுவர் தினம் (ஜன. 15), உழவர் திருநாள்(ஜன. 16), தெலுங்கு வருடப் பிறப்பு(ஏப். 2), மே தினம் (மே 1), பக்ரீத்(ஜூலை.10), காந்தி ஜெயந்தி (அக். 2), மிலாடிநபி (அக். 9), கிறிஸ்துமஸ் (டிச. 25) ஆகிய 9 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. காந்தி ஜெயந்தி (அக். 2),ஆயுத பூஜை (அக். 4), விஜயதசமி(அக். 5) என தொடர்ந்து வருவதால், அக். 1-ம் தேதி முதல் முதல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x