Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

செய்யாறு அருகே பரிதாபம் - ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு :

திருவண்ணாமலை

செய்யாறு அடுத்த சிறுங்கட்டூரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன்கள் வரதராஜ் (12), வருண்குமார் (10). அதே கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தியின் மகன் சுதாகர்(7).

3 சிறுவர்களும் நேற்று பிற்பகல் பாப்பாந்தாங்கலில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏரி நீரில் மூவரும் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளனர். இதையறிந்த அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தோர் சில மணிநேர தேடுதலுக்குப் பிறகு 3 சிறுவர்களையும் மீட்டனர். பின்னர், தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறுவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலறிந்த செய்யாறு போலீஸார், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 3 சிறுவர்களின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மோரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x