

கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12 ஆயிரத்து 99 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 16 ஆயிரத்து 231 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து ஆற்றில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 89 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 90.17 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 52.84 டிஎம்சி-யாக உள்ளது.