Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

புதிதாக 1,233 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 734, பெண்கள் 499 என மொத்தம் 1,233 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதிகபட்சமாக சென்னையில் 160, கோவையில் 136 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்து 85,874ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 34,968 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,434 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 15,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x