கோடநாடு எஸ்டேட் கொள்ளையின்போது பயன்படுத்தப்பட்ட - வாகனத்தின் உரிமையாளர், இடைத்தரகரிடம் போலீஸார் விசாரணை :

உதகையில் காவல்துறையினரின் விசாரணைக்கு வந்த நவ்ஷாத் மற்றும் நவ்ஃபுல். படம்: ஆர்.டி.சிவசங்கர்
உதகையில் காவல்துறையினரின் விசாரணைக்கு வந்த நவ்ஷாத் மற்றும் நவ்ஃபுல். படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளர் மற்றும் இடைத்தரகரிடம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை போலீஸார் விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த வழக்கின் 103 சாட்சிகளில் 41 சாட்சிகளிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது பல சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உதகையில் உள்ள பழையமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களிடம் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரிடம் மறு விசாரணை நடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 10-வது நபரான ஜித்தின் ஜாயின் உறவினர் ஷாஜியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தன்று கனகராஜ், வாளையாறு மனோஜ், சயான் கோவையில் இருந்து கோடநாடுக்கு காரில் வந்தனர்.

மேலும், கேரளாவில் இருந்துகோடநாட்டுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் 2 வாகனங்களில் வந்துள்ளனர். இதில், ஒரு வாகனத்தை ஜித்தின் ஜாய் ஓட்டி வந்துள்ளார். அந்த வாகனத்தில் ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி ஆகியோர் வந்துள்ளனர். இந்த வாகனத்தை அதன் உரிமையாளர் நவ்ஷாத் என்பவரிடம் இருந்து இடைத்தரகர் நவ்ஃபுல் பெற்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார். இவர்கள் இந்த வழக்கில் 41 மற்றும் 42-வது சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு வாகனம் வழங்கிய உரிமையாளர் நவ்ஷாத், இடைத்தரகர் நவ்ஃபுல் ஆகியோரிடமும் நேற்று விசாரணை நடந்தது.

விசாரணைக்கு ஆஜரான இருவரிடமும் டிஐஜி முத்துசாமி, எஸ்பி ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் சுமார் 2.30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சந்தேக மரணங்கள்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in