காமராஜர் விருது: பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு :

காமராஜர் விருது: பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு :
Updated on
1 min read

தமிழகத்தில் சிறந்த கல்விச் சேவையாற்றும் நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2021-ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது, ஜனவரி மாதம் நடைபெறஉள்ள தமிழக அரசின் சிறப்பு விழாவில்அளிக்கப்பட உள்ளது.

இதையடுத்து இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயார்செய்து அவர்களின் சுயவிவரக் குறிப்புகளுடன் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் துறை இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் மு.பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in