

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்திறப்பு விநாடிக்கு 14 ஆயிரம்கனஅடியாக அதிகரிக்கப்பட்டுஉள்ளது.
டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ல் இருந்தும், கால்வாய் பாசனத்துக்கு ஆக.1-ல் இருந்தும் நீர் திறந்துவிடப்படுகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் டெல்டா மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்தது.
தற்போது டெல்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ளதால், பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று நண்பகல் முதல் 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரத்து 709 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14 ஆயிரத்து 512 கனஅடியானது. நேற்று முன்தினம் 68.05 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 68.84 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 31.71 டிஎம்சி-யாக உள்ளது.