

கடந்த பிப்.23-ல் குழந்தை பிரதீப்பை துளசி கொடூரமாக தாக்கி அதனை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அவரே காயமடைந்த குழந்தையை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கடந்த 40 நாட்களுக்கு முன்பு துளசியின் செல்போனை வடிவழகன் பார்த்துள்ளார். அதில் குழந்தை பிரதீப்பை துளசி தாக்கும் 4 வீடியோக்கள் இருந்தன. அதிர்ச்சி அடைந்த வடிவழகன் குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொண்டு, துளசியை மட்டும் அவரின் தாய்வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டார். சம்பந்தப்பட்ட வீடியோ உறவினர்கள் மூலம் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, வடிவழகன் தந்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் துளசி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆந்திரா சென்று அவரை கைது செய்தனர்.