

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர்திறப்பு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியில் இருந்து, 12 ஆயிரம்கனஅடியாக குறைக்கப்பட்டுஉள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து 171 கனஅடியாக இருந்தது. நேற்று 4 ஆயிரத்து 379 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில, நேற்று முன்தினம் இரவு முதல் 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 69.98 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 69 அடியானது. நீர் இருப்பு 31.84 டிஎம்சி-யாக உள்ளது.