

லஞ்சம் வாங்கியதாக பத்திரப்பதிவுத் துறை கரூர் மாவட்ட பதிவாளர், தற்காலிக கார் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்ட பத்திரப்பதிவுத் துறை மாவட்ட பதிவாளர் யோ.பாஸ்கரன்(51). இவர், சார்பதிவாளர் அலுவலகங்களுக்குஆய்வுக்கு செல்லும்போது அதிகஅளவில் லஞ்சம் கேட்பதாக வந்தபுகார்களின் பேரில், மாவட்டஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், யோ.பாஸ்கரனின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கரூர் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான போலீஸார் உப்பிடமங்கலத்தில் இருந்து ரெங்கபாளையம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மாவட்ட பதிவாளர் யோ.பாஸ்கரன் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
ரூ.48 ஆயிரம் பறிமுதல்
இதையடுத்து, மாவட்ட பதிவாளர் யோ.பாஸ்கரன் மீது லஞ்சம் பெற்றதாகவும், தற்காலிக ஓட்டுநர் சந்திரசேகரன்(48) மீது லஞ்சம் பெற உடந்தையாக இருந்ததாகவும் கரூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.