பெண்களிடம் பணம் பறித்த போலி போலீஸ் :

பெண்களிடம் பணம் பறித்த போலி போலீஸ்  :
Updated on
1 min read

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவிஜயன்(42), தான் ஒரு காவல் உதவி ஆணையர் எனக் கூறி, பிற மாநில முதல்வர்கள், ஆளுநர், காவல் அதிகாரிகள் எனப் பலரையும் சந்தித்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டு வந்தார்.

சமீபத்தில் திண்டுக்கலில் போலீஸில் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விஜயனின் முகநூல் படங்களை பார்த்து பெண்கள் உட்பட பலர் அவருக்கு நண்பர்களானதும், அவர்களிடம் விஜயன் பணம் பெற்றதும் தெரியவந்தது. இதை கடனாக பெற்று, சிறு தொகையை மட்டும் திருப்பி வழங்கியுள்ளார். சில இடங்களில் போலீஸ் அதிகாரி என கூறி, விடுதிகளில் இலவசமாகத் தங்கியுள்ளார். சில இடங்களில் ஓட்டல்களில் இலவசமாக சாப்பிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. விஜயன் கைதானது தெரிந்ததும், பெண்கள் உட்பட பலர் அவரது முகநூல் நட்பில் இருந்து விலகியுள்ளனர்.

போலீஸ் அதிகாரி உடையில்தான் யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை என்று விசாரணையில் விஜயன் உறுதிபடக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in