

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சோழப் பேரரசின் மாமன்னனாக திகழ்ந்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரைப் போற்றும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
மேகேதாட்டு பிரச்சினையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. கர்நாடகாவில் ஆளும் பாஜகவின் முதல்வரை சந்தித்து, மேகேதாட்டுவில் அணை கட்டும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தாமல், பாஜகவினர் உண்ணாவிரதம் இருப்பது ஏற்கத்தக்கதல்ல. நாடாளு மன்றம் முடங்குவதற்கு பிரதமர் மோடியே காரணம் என்றார்.