

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன் மகன் தரணிதரன் (4-ம் வகுப்பு), ஜெயபிரகாஷ் மகன் விக்னேஷ்வரன் (2-ம் வகுப்பு), வீரமணிமகன் வீரன் (எல்கேஜி).
பெற்றோர் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் அதே கிராமத்தில் வேலைக்கு சென்றிருந்த நிலையில், 3 சிறுவர்களும் அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். தண்ணீர் அதிகம் உள்ள பகுதிக்குச் சென்றவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர். வேலைக்குச்சென்ற பெற்றோர் வீடு திரும்பி சிறுவர்களை தேடும்போதுதான், 3 சிறுவர்களும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
பின்னர், வெறையூர் போலீஸார் வந்து கிராமத்தினர் உதவியுடன் சிறுவர்களின் உடல்களைமீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வெறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.