

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,002 கனஅடியாக குறைந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால்,கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 12,776 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 7,002 கனஅடியானது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 82.53 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 81.89 அடியானது. நீர் இருப்பு 43.86 டிஎம்சி உள்ளது.