ரூ.1.60 கோடி மதிப்புள்ள புகையிலைப் பொருள் பறிமுதல் :

ரூ.1.60 கோடி மதிப்புள்ள புகையிலைப் பொருள்  பறிமுதல் :
Updated on
1 min read

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை வட மாநிலங்களில் இருந்து சேலத்துக்கு கடத்திவரப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீஸார் சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் சாலை மற்றும் உடையாப்பட்டி பைபாஸ் சாலைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகளில்இருந்து 377 மூட்டை குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இவற்றின்மதிப்பு ரூ.1.60 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in