தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை :

தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை :
Updated on
1 min read

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திபெற்றது.

தற்போது கரோனா ஊரடங்கு நடைமுறைகள் வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தளர்வுகளுடன் கூடிய முழுஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நாட்களான 23-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.38 மணி முதல் 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை 8.51 மணி வரை மலை சுற்றும் பாதையில் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. எனவே, திருவண்ணாமலைக்கு யாரும் கிரிவலம் வர வேண்டாம் என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in