விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உடந்தை -  திருச்சியில் சுங்க ஆய்வாளர் கைது :  7 பேரிடம் இருந்து 3.4 கிலோ தங்கம் பறிமுதல்

விமான நிலையத்தில் தங்க கடத்தலுக்கு உடந்தை - திருச்சியில் சுங்க ஆய்வாளர் கைது : 7 பேரிடம் இருந்து 3.4 கிலோ தங்கம் பறிமுதல்

Published on

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 7 பேரிடம்இருந்து 3.4 கிலோ தங்க நகைகளை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கஆய்வாளரும் கைது செய்யப்பட்டார்.

சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடந்த 18-ம் தேதி இரவு திருச்சிக்கு வந்தது. அதில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு தூத்துக்குடி துணை இயக்குநர் பாலாஜிதலைமையில் 12 பேரைக் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து, சார்ஜா விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விஜய், மணிகண்டன், செல்வக்குமார், கோபி ஆகிய 4 பயணிகளிடமிருந்து ரூ.1.60 கோடி மதிப்பிலான 3.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர டெர்மினலுக்கு வெளியே, கடத்தல் தங்கத்தை பயணிகளிடமிருந்து வாங்கிச் செல்வதற்காக காத்திருந்த புகாரி, ரிஸ்வான், அப்துல் பயாஸ் ஆகியோரும் பிடிபட்டனர். இந்த 7 பேரையும் கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, திருச்சி விமானநிலையத்தில் பணிபுரியும் சுங்க ஆய்வாளர் தர்மேந்திரா என்பவர் கடத்தல் தங்கத்தை வெளியில் கொண்டுவர உதவி செய்து வந்ததாக தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரையும் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in