காட்பாடி அருகே ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் - ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ளி, ரூ.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் : வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

காட்பாடி ரயில்நிலையம் வந்த  ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்த  144 கிலோ வெள்ளி, 32 லட்சம் பணம்.படம்: வி.எம்.மணிநாதன்
காட்பாடி ரயில்நிலையம் வந்த ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்த 144 கிலோ வெள்ளி, 32 லட்சம் பணம்.படம்: வி.எம்.மணிநாதன்
Updated on
1 min read

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டிணத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு கேரள மாநிலம் கொல்லம் நோக்கி புறப்பட்ட விரைவு ரயில் நேற்று அதிகாலை காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கோட்ட ரயில்வே குற்றப் புலனாய்வு பிரிவுஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி, துணை உதவி ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எஸ் - 6 மற்றும் எஸ் - 7 பெட்டியில் பெரிய பைகளுடன் பயணம் செய்த 4 பேரை சந்தேகத்தின் பேரில்போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(42), நித்யானந்தம் (35), பிரகாஷ்(28), சுரேஷ்(35)என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் சேலத்தில் சொந்தமாக வெள்ளி நகைப் பட்டறை வைத்திருப்பது தெரியவந்தது.வெள்ளிக் கட்டிகளை வாங்கி கால் கொலுசு, காப்பு, மோதிரம்உள்ளிட்ட ஆபரணங்களாக மாற்றி விற்று வருவது தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் விசாகப்பட்டிணத்தில் உள்ள நகை வியாபாரிகளுக்கு வெள்ளி ஆபரணங்களை இவர்கள்கொடுத்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், உரியஆவணங்கள் இல்லாமல் ரூ.1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக் கட்டிகள், ஆபரணங்கள் மற்றும் ரூ.32 லட்சம் ரொக்கம் இருந்தது.

இவற்றை பறிமுதல் செய்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸார் 4 பேரையும் பிடித்து,காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.

வரி செலுத்தாமல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி மற்றும் பணத்தைவேலூர் மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in