

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் 12 முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் நிறுத்தப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 663 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 674கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 79.59 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 78.31 அடியானது. நீர் இருப்பு 40.29 டிஎம்சியாகும்.