

தமிழக டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகள் பணியாற்றிய ஜே.கே.திரிபாதி நேற்று ஓய்வு பெற்றார்.
புதிய டிஜிபி சைலேந்திரபாபுவிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்த திரிபாதிக்கு காவல்துறை சார்பில் மரபுப்படி வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.
திரிபாதியும் அவரது மனைவியும் காரில் அமர்ந்திருந்தனர். அந்த காரில் பூக்களால் அலங்கரித்த கயிறை கட்டி, அவருடன் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் தேரை வடம்பிடித்து இழுப்பதுபோல இழுத்துச் சென்றனர். பாரம்பரிய முறைப்படி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
டிஜிபி அலுவலகத்தின் நுழைவாயில் வரை காரை இழுத்துச் சென்று வழியனுப்பினர். இசைக்குழுவினரின் இசை முழங்க காவல் துறையினர் அணிவகுத்து நின்று அவர்களை வழியனுப்பி வைத்தனர்.