சார் பதிவாளர் உட்பட 2 பேர் சஸ்பென்ட் :

சார் பதிவாளர் உட்பட 2 பேர் சஸ்பென்ட் :
Updated on
1 min read

திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடான ஆவணப் பதிவு குற்றச்சாட்டில் சார் பதிவாளர் உள்ளிட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த ஆவணப் பதிவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை சரக பதிவுத் துறை தலைவர் எம்.பி.சிவனருள் உத்தரவின்பேரில், துணைத் தலைவர் சாமிநாதன் நடத்திய விசாரணையில் 1261, 1268, 1727, 1728 ஆகிய எண்களைகொண்ட ஆவணப் பதிவுகளில் தவறு நடந்தது தெரிந்தது.

இந்த விசாரணை அறிக்கையின்பேரில் திருப்புவனம் சார் பதிவாளர் ஏ.ஆனந்தராணி, உதவியாளர் எம்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆவணப் பதிவுச் சட்ட விதி 22ஏ(2) மீறியதான குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பதிவுத் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘உரிய அங்கீகாரம் பெறப்படாத இடங்களை குடியிருப்பு மனைகளாக மாற்றுவதற்கான ஆவணப் பதிவு நடப்பதாக அதிகளவு புகார்கள் வருகின்றன. இந்தப் புகாரின்பேரிலேயே 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in