பெண் கொலையில் உதவி ஆய்வாளர் கைது :

பெண் கொலையில் உதவி ஆய்வாளர் கைது :

Published on

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியைச் சேர்ந்தவர் மார்கரேட் என்ற மாகி(51). இவருக்கு திருமணமாகி கணவர்,குழந்தைகள் உள்ளனர். மாகிக்கும் உதகை கியூ பிரிவு காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்த முஸ்தபாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாகியை, முஸ்தபா அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின்பு நேற்று காலை கரோனாதொற்றால் மாகி இறந்துவிட்டதாக கூறி, அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வந்த புகாரைத் தொடர்ந்து முஸ்தபாவை பிடித்து போலீஸார் விசாரித்ததில், குடிபோதையில் மாகியை தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in